கோவையில் கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பில் 3-வது சர்வதேச தொற்றா நோய்கள் மாநாடு

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் தொற்றா நோய்கள் தொடர்பான 3-வது சர்வதேச மாநாடு கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.செப்டம்பர் 19 ந்தேதி துவங்கி இரண்டு நாட்கள் நடைபெற்ற மாநாட்டை கே.எம்.சி.ஹெச் தலைவர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி தொடங்கி வைத்தார்.

கே.எம்.சி.எச். இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் அருண் பழனிசாமி சிறப்புரையாற்றினார்.

மாநாட்டில் தேசிய சர்வதேச மருத்துவ நிபுணர்கள் உட்பட கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் கல்லீரல் நோய் மற்றும் எண்டோஸ்கோபி நிபுணர் டாக்டர் அருள்ராஜ் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்தியாவில் தொற்றா நோய்களின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுப்பது, நோய் வளர்ச்சியை புரிந்துகொள்வது, நோயாளிகளின் சிகிச்சை முறைகளை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொது சுகாதார நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

மாநாட்டையொட்டி கே.எம்.சி.ஹெச் மேற்கொண்ட ஆய்வில், 2,250 பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதில் மூன்றில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தமும், இருவரில் ஒருவருக்கு நீரிழிவும் இருப்பது தெரியவந்ததாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், உடல் பருமன் உள்ளவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாகவும்,குறிப்பாக, உடல் பருமன் , 20 முதல் 40 வயதான பெண்களின் உடல்பருமன் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன், அதிகரித்த சர்க்கரை அளவு, கொழுப்புச் சத்து உள்ளிட்ட காரணிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக இருப்பதால், இதய நோய் உள்ளிட்ட பாதிப்புகளுக்கான வாய்ப்பு அதிகரிப்பதாகவும் மாநாட்டில் எடுத்துரைக்கப்பட்டது.

இது தொடர்பாக செயதியாளர்களிடம் பேசிய டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி, இந்தியாவில் தொற்றா நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்ததுடன், இதுபோன்ற ஆய்வுகளின் முடிவுகள் அரசின் கொள்கை வகுப்புக்கும், பொது சுகாதாரத் திட்டங்களை உருவாக்குவதற்கும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *