தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் இல்லத்தில் உள்ள பி.எல்.ஏ. கூட்டரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு குண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் வந்திருந்த மாநில நிர்வாகிகளுடன் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா கலந்துரையாடினார் அப்போது அவர் பேசும் போதுஅரசின் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைவதில் தொண்டு நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. குறிப்பாக பெண்கள், ஏழை-எளிய மக்கள் மற்றும் உதவி தேவைப்படுவோரின் முன்னேற்றத்திற்காக தொண்டு நிறுவனங்களும், மகளிர் சுயஉதவிக் குழுக்களும் ஆற்றி வரும் சேவை பாராட்டுக்குரியது.
மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது. தொண்டு நிறுவனங்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் நியாயமான கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் தீர்வு காண தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
முன்னதாக தொண்டு நிறுவனங்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் நலன் மற்றும் வளர்ச்சி தொடர்பான கோரிக்கை மனுக்கள் அவரிடம் வழங்கப்பட்டன. தொடர்ந்து சமூக சேவையில் சிறப்பாக பணியாற்றிய தொண்டு நிறுவன பிரதிநிதிகளுக்கு ஜெகநாத் மிஸ்ரா எம் எல் ஏ பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.
நிகழ்ச்சியில் சட்ட ஆலோசகர் எம்.கே.எம். முத்துராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை கூட்டமைப்பின் மாநில தலைவர் பி. மனோகரன், மாநில பொது ச்செயலாளர் வி.ஆர். ராஜன்,
மாநில செயலாளர் ஆர். அருள் கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.