திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் கிளையில் ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை சார்பில் புரட்டாசி மாதம் சபரிமலையில் நடை திறப்பை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சி வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது.

நிறுவனர் மற்றும் தேசிய தலைவருமான திரு.மு.ரா அரவிந்தன், தேசிய பொது செயலாளர் எம்.பி நந்தகுமார் அவர்கள் இருவரும் அன்னதான நிகழ்ச்சி துவக்கி வைத்தனர்.

திருவள்ளூர் மாவட்ட தலைவர் திரு.ஏழுமலை, திருவள்ளூர் மாவட்ட பொருளாளர் திரு.சுரேஷ்குமார் அவர்கள் தலைமையில் மணவாள நகர் கிளை தலைவர் திரு . ரமேஷ், மணவாள நகர் கிளை செயலாளர் திரு.சந்தோஷ் அவர்கள் முன்னிலையில் அன்னதான நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

விழாவையொட்டி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்காக அன்னதானம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு, ஏராளமானோர் கலந்து கொண்டு உணவருந்தினர்.
1000நபருக்கு மேல் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் தேசிய, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மணவாள நகர் கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பக்தி, சேவை மற்றும் சமுதாய நலனை முன்னிறுத்தி நடைபெற்ற இந்நிகழ்ச்சி மணவாள நகர் பகுதியில் பொதுமக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *