பேரளத்தில் சங்கரா & சாரோ பள்ளி மற்றும் தமிழ்நாடு எக்ஸலன்ட் தனியார் பள்ளி ஆசிரியர் அமைப்பு சார்பில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டனர். கல்வித் துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சேவையைப் பாராட்டி சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு தனியார் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. பால் மணி மற்றும் மாநில, மாவட்ட பொறுப்பாளர்களின் அழைப்பை ஏற்று, S. சிவக்குமார், BIS Trainer – Government of India & Secretary, FEDCOT INDIA Consumer Movement, Puducherry–Karaikal, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு சாதனையாளர் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.