ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன்
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ந.ப்ரியா ரவிச்சந்திரன், நேற்று (21.09.2026) ஆற்காடு அண்ணா சாலையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை கடையில் தீபாவளி 2026 பண்டிகையை முன்னிட்டு 30% சிறப்பு தள்ளுபடி விற்பனை மற்றும் முதல் விற்பனையினை துவக்கி வைத்தார்கள்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய வண்ணங்களில் காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம், சேலம் பட்டு சேலைகள், கோவை மற்றும் பழனி மென் பட்டு சேலைகள், கோவை, அருப்புக்கோட்டை, திண்டுக்கல், பரமக்குடி, மணமேடு, நெகமம், உறையூர், சேலம், காரைக்குடி, பருத்தி சேலைகள், திண்டுக்கல் ஆர்கானிக் சேலைகள், குர்தீஸ்கள், சுடிதார் இரகங்கள், ஆடவர்களுக்கான வேட்டிகள், ரெடிமேட் சட்டைகள், குர்தாக்கள், லுங்கிகள், போர்வைகள், துண்டுகள், கைகுட்டைகள், திரைச்சீலைகள் போன்ற இரகங்கள் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாண்டு புதிய வரவுகளாக ரிங்கிள் ஃப்ரி சட்டைகள், மகளிருக்கான நவீன ஆடைகள்,
சிறுமிகளுக்கான வண்ண பாவாடை சட்டைகள், மூங்கில் இழைகளால் நெய்யப்பட்ட துண்டுகள் என பல புதிய இரகங்கள் விற்பனைக்கு உள்ளன.
கோ-ஆப்டெக்ஸின் மாதந்திர சேமிப்பு திட்டம் ரூ.300/- முதல் தொடங்குகிறது. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் ஆன்லைன் விற்பனை www.cooptex.gov.in மூலமும் என்ற இணைய தளத்தின்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது
இந்நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் பெ.ஸ்டாலின், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி வ.ர.விஜயகுமார். இரக மேலாளர் ச.பெருமாள், விற்பனை நிலைய மேலாளர் ஜெ.கணேஷ், வட்டாட்சியர் சண்முக சுந்தரம் மற்றும் திரளான வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.