தமிழக வெற்றி கழகம், தேனி தென்மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்டம் கம்பம் நகரில் எம்எல்ஏ இல்லத்தில் உள்ள பி.எல்.ஏ. கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது

இந்த கூட்டத்திற்கு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தலைமை வகித்தார் தமிழக வெற்றி கழக மாவட்ட இணைச் செயலாளர் கூடல் செல்வேந்திரன் ஒருங்கிணைப்பாளர் சுறா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் வரவுள்ள உள்ளாட்சித் தேர்தல், கூட்டுறவு சங்கத் தேர்தல் மற்றும் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து
கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுக்காக சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில், ஒவ்வொருவருக்கும் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், ஈ.சி.ஜி. உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிகழ்ச்சியில்
ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. பேசியது

பொதுவாக அரசியல் கட்சிகளில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். கூட்டம் நிறைவடைந்ததும், தேநீர், காபி அல்லது உணவு வழங்கப்படுவது நடைமுறையாக உள்ளது.

ஆனால், தமிழக வெற்றி கழகத்தை பொறுத்தவரை, கழக நிர்வாகிகளின் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டுள்ளது. அதிகாலையிலேயே கூட்டம் தொடங்கியதால், அனைவரும் வெறும் வயிற்றுடன் வருமாறு கேட்டுக்கொண்டோம். அதன்படி, நிர்வாகிகள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர்.

ஒரு இயக்கத்தின் வளர்ச்சிக்கு நிர்வாகிகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அவர்களின் உடல்நலமும் முக்கியமானது. நீங்கள் அனைவரும் கழக நிர்வாகிகள் மட்டுமல்ல, ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போன்றவர்கள்.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழக நிர்வாகிகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டுள்ளது.

கட்சி பணிகளில் தொடர்ந்து ஈடுபடும் நிர்வாகிகள், தங்களது உடல்நலத்திலும் அக்கறை செலுத்த வேண்டும். உடல்நலம் நன்றாக இருந்தால்தான், மக்கள் பணியையும், கழகப் பணியையும் சிறப்பாக மேற்கொள்ள முடியும்.எனவே, ஒவ்வொரு நிர்வாகியும் அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு, தங்களது உடல்நலத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். கழகத்தின் வளர்ச்சியுடன், நிர்வாகிகளின் நலனையும் இணைத்து செயல்படுத்துவதே நமது நோக்கம்.இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அய்யர், அபுதாஹிர், கம்பம் நகர பொறுப்பாளர் சுப்பிரமணி, சட்டமன்ற உறுப்பினரின் தனிச்செயலாளர் ரகுபதி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *