தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம்:
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கல்வி மாவட்டத்துக்குட்பட்ட குண்டடம் ஒன்றியம், கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு, நேற்று (22-ந் தேதி) தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் குண்டடம் ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலர்-2 தர்மராஜ், மாணவர்களுக்கு காலை உணவு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். குண்டடம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அசோகன் முன்னிலை வகித்தார்.
முதல் நாளில் மாணவர்களுக்கு சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், சத்துணவுப் பொறுப்பாளர், சமையலர், அங்கன்வாடி பொறுப்பாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.