அரியலூர் மாவட்டத்தில் வைகோ பிறந்த தினம்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் பிறந்தநாள் அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது விக்கிரமங்கலம் மற்றும் அரசு நிலையிட்டபுரம் வீ கைகாட்டி அரியலூர் நகரம் ஆகிய இடங்களில் அரியலூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ கழக உயர் நிலை குழு உறுப்பினார் வழக்கறிஞர் கு சின்னப்பா தலைமை ஏற்று கழக கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்
அரியலூர் மாவட்ட செயலாளர் க.இராமநாதன் விழாவிற்கு முன்னிலை வகித்தார் பின்பு அரசு நிலையிட்டபுரம் கிராமத்தில் நிலத்தடி நீரை பாழ் படுத்துகிற சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியை முன்னாள் எம்எல்ஏ வழக்கறிஞர் கு சின்னப்பா துவக்கி வைத்தார் அரியலூர் சாந்தோம் முதியோர் இல்லத்தில் 40 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது
இனிப்பும் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் தா பலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கவிஞர் எழிலரசன் அரியலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் காட்டுபிரிங்கியம் பி சங்கர் தெற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை வடக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் பொதுக்குழு உறுப்பினர் கொளஞ்சி என்கின்ற சிவகுமார் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் சசிகுமார் மற்றும் மாவட்ட அணி அமைப்பாளர்கள் ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர் அரியலூர் மாவட்ட செயலாளர் க.ராமநாதன் அனைவருக்கும் நன்றி கூறினார்