துறையூர் நவ-14
திருச்சி மாவட்டம் துறையூரில் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்ட அரசு சுகாதாரத் துறையுடன் இணைந்து ரீச் (REACH) நிறுவனம் ஓசை (OSAI) திட்டத்தின் மூலம் (14. 11 .2026 ) இன்று துறையூர் பழைய பேருந்து நிலையத்தில் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி, மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் மணிவண்ணன் மற்றும் துறையூர் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் செந்தில்குமார் ஆகியோரின் வழிகாட்டுதலிலும், சுகாதார ஆய்வாளர் வளனரசு ஒத்துழைப்புடனும் சிறப்பாக நடைபெற்றது.
காலை 10 மணி முதல் பிற்பகல் 1மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நீரிழிவு நோய்க்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதன் பாதிப்புகள், பின்பற்ற வேண்டிய உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதற்காக விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன், REACH நிறுவனத்தின் பணியாளர்கள் பொதுமக்களுக்கு விரிவான விளக்கங்களையும் வழங்கினர்.மேலும், விழிப்புணர்வை சுவாரஸ்யமான முறையில் ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விளையாட்டு மற்றும் கலந்துரையாடல் செயல்பாடுகளும் நடத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சியின் மூலம் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது. அவர்களில் 60-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவச இரத்தச் சர்க்கரைப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்