கரூர் செய்தியாளர் மரியான் பாபு


பூனா ஒப்பந்த நாளில் கரூர் ரவீஷ் அரங்கத்தில் இடஒதுகீடும் இன்றைய நிலையும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் தலித் விடுதலை இயக்கம் சார்பில் நடைபெற்றது. இக்கருத்தரங்கதில் தலித் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் ச.கருப்பையா தலைமை தாங்கினார்.

தலித் விடுதலை இயக்கம் கரூர் மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன்,திருப்பூர் மாவட்ட தலைவர் மாரிமுத்து சம நீதி கழகம் செய்தி தொடர்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கிணை எழுத்தாளர் அருள் முத்துக்குமரன் துவக்கி வைத்து உரையாற்றினார்.
விசிக மண்டல துணை செயலாளர் வழக்கறிஞர் புகழேந்தி விளக்கவுரையாற்றினர்.

கருத்தரங்கில் CPML மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் மகஇக சார்பில் வழக்கறிஞர் ஜெகதீஷ்,அம்பேத்கர் மக்கள் மையம் தலைவர் சசிகுமார், தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி (TNBSP) கரூர் மாவட்ட தலைவர் நிலவு சிவா,வணங்காமுடி பதிப்பகம் தமிழ் முரசு,பண்டிதர் பதிப்பகம் நளங்கிள்ளி, அயோதிதாசர் அம்பேத்கர் வாசகர் வட்டம் முத்து பிரதீபன் சாக்யா தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் பொன்னுசாமி,புரட்சி பரதம் கட்சி மாவட்ட செயலாளர் A சேகர், மக்கள் தேசம் கட்சி மாவட்ட செயலர் தெம்மாவூர் நந்தன், தமிழக நீதி கட்சி ஆறுமுகம்,தலித் ராஜகோபால் ஆகியோர்கருத்துரை வழங்கினார்கள்.


நிறைவுரையாக மூத்த வழக்கறிஞர் பா. ப.மோகன் நிறையுரையற்றினர். மாநில தொண்டரணி செயலாளர் நிசோக் ராஜா நன்றியுரையாற்றினார்.

கூட்டத்தில் பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்களும் வழக்கறிஞர்களும், எழுத்தாளர்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில்
பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களின் பின்னடையு காலி பணியிடங்களை நிரப்ப தமிழக அரசை வலியுறுவது,நீதி துறையில் அரசு வழக்கறிஞர், ஊராட்சி எழுத்தர், இந்து சமய அறநிலையத்துறை தலைவர்,கூட்டுறவு துறைகளில் பெண்கள்,மாற்று திறனாளிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் கடந்த 80 ஆண்டுகளாக இடஒதுக்கீடு மறுக்கப்பட்டதை வன்மையாக கண்டிப்பதோடு தமிழக அரசு உடனடியாக மேற்கண்ட துறைகளில் உரிய பிரதிநிதுவம் வழங்க வேண்டும்,

தேசிய மயமாக்கப்பட்ட வங்கி,கூட்டுறவு துறைகளில் நகை மதிப்பிட்டாளர் பணி நியமங்களில் இட ஒதுக்கீட்டு முறை நடைமுறைபடுத்த வேண்டும்,தமிழகத்தில் பல்கலைக்கழம் மற்றும்கல்லூரிகளில் காலியாக உள்ள 8000 கௌரவ பேராசிரியர் நியமனங்களை உடனடியாக நடைமுறைபடுத்த வேண்டுமென இக்கருத்தரங்கில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *