கரூர் செய்தியாளர் மரியான் பாபு
தலித் விடுதலை இயக்கம் மாநில தலைவர் ச.கருப்பையா தலைமை செயலகம்,
முதலமைச்சருக்கு மனு..
அரசு உதவி பெறும் பெறும் தனியார் பள்ளிகள் தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆங்கில வழி பாட பிரிவுக்காக கல்வி கட்டணம் அரசாணை எண் 148/2018-க்கு எதிராக வசூலிப்பதனை குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தார்.தலித் விடுதலை இயக்கம் சார்பாக தங்களை இக்கடிதத்தின் மூலமாக சந்திப்பில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.தமிழக அரசால் கிராமப்புற மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் கடந்த 20.07.2018-ஆம் ஆண்டில் அரசாணை (நிலை) எண் 148-ன் தமிழக அரசின் உதவி பெறும் தனியார் தொடக்கப் பள்ளிகள்,நடுநிலைப் பள்ளிகள்,உயர்நிலைப்பள்ளிகள்,மேல்நிலை பள்ளிகள் என சுமார் 8254 பள்ளிகளில் ஆங்கில வழி பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இப்பள்ளிகளில் பயிலுகின்ற 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் தல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கின்ற ஆங்கில வழி மாணவர்களுக்கு ஆண்டு கற்பிப்பு கட்டணமாக தலா 200 ரூபாயும் 9-ம் வகுப்பு முதல்10-ம் வகுப்புவரை படிக்கின்ற ஆங்கில வழி மாணவர்களுக்கு ஆண்டு கற்பிப்பு கட்டணமாக தலா 250-ம்,11 மற்றும் 12ஆம் வகுப்பு ஆங்கில வழியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஆண்டிற்கு கல்வி கட்டணமாக நெறிமுறைகள் வகுக்கப்பட்டு கடந்த 20.07.2018-ஆம் ஆண்டில் அரசாணை (நிலை) எண் 148-ன் படி அரசாணை பிறக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஒவ்வொரு தனியார் பள்ளியும் தங்கள் பள்ளியில் படிக்கக்கூடிய ஆங்கில வழி கல்வி பிரிவுக்கு கட்டாயப்படுத்தி மாணவர்களிடம் ஆண்டிற்கு தலா 10 ஆயிரம் முதல் 15ஆயிரம் வரை கல்வி கட்டணமாக தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டார கல்வி அலுவலகத்தின் வட்டார கல்வி அலுவலர்1மற்றும்2 ஆகியோரின் சார்பாக கடந்த 03.07.2026 அன்று அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், தாளாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கு அனுப்பியசுற்றிக்கை கடிதத்தில் அரசு விதிமுறைகளை மீறி பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடமிருந்து கல்வி கட்டணம் கட்டாயப்படுத்தி வசூலிக்கப்பட்டால் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளார்கள்.
எனினும்தமிழகத்தில் இயங்கக்கூடிய சுமார் 8254 தனியார் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி பாடத்திட்டத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் கல்வி கட்டணம் கட்டாயப்படுத்தி மாணவர்களிடம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
எனவே, தாங்கள் இப்பிரச்சனையில் நேரடியாக தலையிட்டு உடனடியாக அரசாணைக்கு எதிராக கட்டாயப்படுத்தி வசூலிக்கப்படுவதனை குறித்து முறையாக விசாரணை நடத்தி அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்விக்கு விதிமுறைகளுக்கு எதிராக கட்டாயப்படுத்தி கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதைஅரசு தடுத்து நிறுத்துவதோடு, விதிமுறைகளுக்கு எதிராக கட்டாய கல்வி கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரங்களை ரத்து செய்திட உரிய நடவடிக்கை எடுத்திடுமாறு தங்களை அன்போடு வேண்டுகிறோம் என அந்த மனுவில் தலித் விடுதலை இயக்கம் மாநில தலைவர்
ச.கருப்பையா கூறியிருந்தார்.