​கோவை திருமகள் நகர் குடியிருப்போர் நகர் நலச் சங்க நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று, அங்கு அமைந்துள்ள “உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு சிறுவர் பூங்கா”வை நேரில் சென்று பார்வையிட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், பூங்காவை உடனடியாகத் தூய்மைப்படுத்தி முறையான பராமரிப்பு பணிகளைச் செய்து தருமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு வலியுறுத்தினார்.
​

இந்த கள ஆய்வின்போது, பூங்காவின் தற்போதைய நிலைமையையும் பராமரிப்பின்மையையும் பார்வையிட்ட அவர், அதிகாரிகளிடம் பேசி உடனுக்குடன் தேவையான நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொண்டார்.
​இந்த ஆய்வின்போது திமுக பொதுக்குழு உறுப்பினர் இரா. மணிகண்டன், திருமகள் நகர் குடியிருப்போர் சங்கத்தின் தலைவர் சிவகுமார், செயலாளர் செந்தில்நாதன், துணைத்தலைவர் விஜயகுமார், பொருளாளர் நித்யகலா மற்றும் நிர்வாகிகள் முருகையா, துரைசாமி, சு.யுவராஜ், ஸ்ரீ வத்சன், சுந்தர்ராஜன், குடை ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *