கம்பம் புதிய பஸ் நிலையத்தில் வெற்றி பயணத் திட்டப் பேருந்தில் பெண்களுக்கு இலவச டிக்கெட் வழங்கிய எம் எல் ஏ தேனி மாவட்டம் கம்பம் புதிய பேருந்து நிலையத்தில் வெற்றி பயணத் திட்டத்தின் கீழ் இயக்கப்பட்ட பஸ்ஸில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது நடத்துனரிடம் இருந்து பயணச்சீட்டு வழங்கும் எந்திரத்தை பெற்று, பெண் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கினார். மேலும், அவர்களிடம் பயணத்தின்போது ஏற்படும் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து ஜெகநாத் மிஸ்ரா எம்எல்ஏ கூறும் போது வெற்றி பயணத் திட்டத்தின் மூலம் பெண்கள் பாதுகாப்பாகவும் சிரம இன்றியும் பயணம் செய்ய வேண்டும். பேருந்துகளில் தூய்மை, பாதுகாப்பு மற்றும் உரிய நேரத்தில் இயக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
பெண் பயணிகளிடம் ஓட்டுநர்களும், நடத்துனர்களும் கனிவுடனும் மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைவதை உறுதி செய்வது அதிகாரிகளின் கடமை” என்றார் ஆய்வின்போது போக்குவரத்துக் கழக பணிமனை கம்பம் கிளை மேலாளர்கள் பாலகுரு ராஜா மற்றும் தமிழக வெற்றிக் கழக தென்மேற்கு மாவட்ட கழக துணை செயலாளர் உடல் செல்வேந்திரன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அய்யர் தலைமைக் கழக பேச்சாளர் அபுதாஹிர் கம்பம் நகர பொறுப்பாளர் சுப்பிரமணி மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்