.


தூத்துக்குடி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் சேவா ஜோதி பேரணி விவிடி சிக்னலில் இருந்து ஜோதியுடன் பேரணி நடைபெற்றது

பேரணிக்கு மாவட்ட தலைவர் சித்ராங்கன் தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினராக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் வெங்கடேசன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து வைத்தார் அதன் பின்பு செய்தியாளர்களிடம் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் வெங்கடேசன் கூறுகையில் அக்டோபர் மாதம் ஏழாம் தேதி குஜராத் மாநிலத்தின் முதல்வராக நரேந்திர மோடி பதவியேற்றால் 2014 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்

2026 ஆம் ஆண்டு பாரதப் பிரதமரின் 25 ஆண்டுகால சாதனையாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது அதன்படி தூத்துக்குடியில் சேவா ஜோதி பேரணி சிறப்பான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு மாத காலம் செப்டம்பர் 7ஆம் தேதியிலிருந்து அக்டோபர் ஏழாம் தேதி வரை சேவை மாதம் ஆக நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி கொண்டாடி வருகிறது கொண்டாட்டம் என்றால் மாநாடு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வார்கள் திமுக மாநாடு நடத்தி தனக்குத்தானே பட்டம் சூட்டிக் கொள்ளும் ஆனால் பாரதிய ஜனதா அப்படி அல்ல சேவை மனப்பான்மையுடன் பள்ளிகளுக்கு புத்தகங்கள் கோவில்களுக்கு பெயிண்ட் அடித்து கொடுப்பது குளங்கள் தூர் வாருவது இதுபோல சமூக சேவைகளை பாரதிய ஜனதா கட்சி செய்து வருகிறது திமுக ஆட்சி புரிந்த போது பத்து லட்சம் கோடி கடன் வாங்கி தமிழ்நாட்டை சுடுகாடாகி கொண்டு சென்று விட்டார்கள்.

எல்.ஆர் நகல் பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து வாங்கிக் கொள்ளலாம் என்று கடந்த பிப்ரவரி மாதம் அரசு ஆணை வெளியிட்டுள்ளது ஆனால் தூத்துக்குடி மாநகராட்சியில் எல்.ஆர் நகல் கடந்த பிப்ரவரி மாதத்திற்கு முந்திய தேதி போட்டு ஆன்லைன் மூலம் வழங்காமல் கையெழுத்து போட்டு வழங்கி வருகிறார்கள்

இதில் வெளிப்படை தன்மை இல்லை இது மாநகராட்சியில் லஞ்சத்துக்கு வழிவகுத்து வருகிறது இதனை இங்கு உள்ள அமைச்சர் தொடர்பு கொண்டு அதனை தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும் அவர் கண்டுகொள்ளாததால் அமைச்சருக்குதொடர்பு இருக்கிறது பங்கு செல்கிறது என்று தானே அர்த்தம் என்று பிஜேபி கட்சி தேசிய செயலாளர் வெங்கடேசன் கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *