மருதம் நெல்லி கல்விக் குழுமம், ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் தமிழ் இலக்கியங்களில் சங்க காலம் முதல் தற்காலம் வரை தமிழர் மாண்புகள் என்னும் பொருண்மையில் தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்விற்கு மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் கா.கோவிந்த் தலைமை வகித்தார்.மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் செயலாளர் காயத்ரி கோவிந்த், ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சி.பரஞ்சோதி , மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் நா.மகேந்திரன் முன்னிலை வகித்தார்.
திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் முனைவர் பட்ட ஆய்வாளர் மு.கோகிலா மற்றும் ஜெயம் கல்லூரி முதுகலை தமிழ்த்துறை மாணவி ஈஸ்வரி விருந்தினர்களை அறிமுகம் செய்தனர்.
நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி பணிநிறைவு பெற்ற தமிழ் இணைப் பேராசிரியர், துறைத் தலைவர் முனைவர் நா.பழனிவேலு மற்றும் சேலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் அச்சுதன் ஆகியோர் பங்கேற்று ஆய்வு நூல் வெளியீட்டு சிறப்புரை ஆற்றினர்.
சின்னப் பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் மா.பழனி , மேச்சேரி காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் நா.நாகராஜ், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட ஆய்வாளர் ச.வாசுதேவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக தமிழ்த்துறை முதுகலை மாணவி பெ.புவனேஷ்வரி வரவேற்று பேசினார்.
இளங்கலைத் தமிழ்த்துறை மாணவி மு.சத்தியா நன்றி கூறினார் நிகழ்வில் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த் துறைத்தலைவர் இல.சதீஸ்,உதவிப் பேராசிரியர்கள் இல.ஜெய ஸ்ரீ ,கா.கார்த்திக் ராஜா, ர.விக்னேஷ், ரா.கார்த்திக் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.
நிகழ்வில் தருமபுரி மாவட்ட கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் என பலரும் கலந்துகொண்டனர்.