ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன்.

ராணிப்பேட்டை மாவட்டம்
நெமிலி ஸ்ரீ விசாலாட் சியம்மன் சமேத புன்னா கேஸ்வரர் கோயிலில் நேற்று கரியாக்குடல் ஸ்ரீ மகா சரபேஸ்வரர் பீடாதிபதி சார்பில் மகாளய அமாவாசையை முன் னிட்டு மகா பித்ரு சாந்தி ஹோமம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மகா சரபேஸ்வரர்பீடத்தின் பீடாதிபதி ஞானபிரகாச சாமிகள் தலைமை
வகித்தார்.காலை 9மணிக்கு பல்வேறு வாசனை திரவி யங்களைகொண்டு கோயில்வளாகத்தில் சிறப்பு ஹோமங்கள் நடந்தது.

மதியம் 12 மணிக்கு மகேஸ்வர பூஜை மற்றும் வஸ்திரதானம் நடந்தது.முன்னதாக சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும்
ஆராதனை நடந்தது. இதில் சிவனடியார்கள்கலந்து கொண்டு தேவாரம், திருவாசகம் பன்னிருதிருமுறை உள்ளிட்ட நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்து ஹோமத்தில்கலந்து சுவாமியை கொண்டு வழிப்பட்டுசென்றனர். அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *