அரியலூர் தமிழ் பண்பாட்டு பேரமைப்பு ஆட்சி மன்ற குழு கூட்டம் அரியலூர் ஏகேம் ஐஏஎஸ் அகாடமியில் நடந்தது ஆட்சி மன்ற குழு கூட்டம் பேரமைப்பு நிறுவனர் அய்யா செம்மொழி க ராமசாமி அவர்களின் வழிகாட்டுதல் ஆலோசனையின் பேரில் நடந்த இந்த கூட்டத்திற்கு பேரமைப்பின் தலைவர் சீனிபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார் செயலாளர் முனைவர் கதிர்கணேசன் அனைவரையும் வரவேற்று பேசினார்

பேரமைப்பின் அமைப்பு செயலாளர் அரியலூர் ஆசிரியர் அ நல்லப்பன் கருத்துரை வழங்கினார் பேரமைப்பின் பொருளாளர் முனைவர் புகழேந்தி முன்னிலை வகித்தார்

வருகிற 15ஆம் தேதி முன்னாள் குடியரசு தலைவர் ஏ பி ஜே அப்துல் கலாம் அவர்களின் 95வது பிறந்த நாளை ஒட்டி அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அவரது படத்தை திறந்து வைத்து மரக்கன்றுகள் நடுவது இனிப்புகள் வழங்குவது விழாவிற்கு கல்லூரி முதல்வர் டாக்டர் குமரன் அரியலூர் நகர காவல் ஆய்வாளர் இரா வெங்கடேசன் ஆகியோரை விழாவிற்கு அழைப்பது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

கூட்டத்தில் பேரமைப்பின் துணைச் செயலாளர் மங்கையர்க்கரசி இணைச் செயலாளர் செல்லபாண்டியன் செய்தி தொடர்பாளர் தமிழ் களம் இளவரசன் நிர்வாக குழு உறுப்பினர் கே வி முகமது உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *