செய்தியாளர் ராஜாராம் குமார்
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், எறையூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் ஆலயத்தில், முத்தாலம்மன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் விஷ்ணு துர்க்கை அம்மனின் முதலாம் நாள் பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் முத்தாலம்மன் சுவாமிக்கு பால் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், புஷ்ப அபிஷேகம், சந்தன அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் மற்றும் விபூதி அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.
மேலும், விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு முதலாம் நாள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சென்னை மற்றும் மேல்மருவத்தூர் பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் தங்களது குலதெய்வ வழிபாட்டிலும் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீ முத்தாலம்மனின் அருளைப் பெற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்த நிலையில், நிகழ்ச்சி பக்தி பரவசத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.