தூத்துக்குடி தமிழகம் முழுவதும் கடும் வெயிலின் தாக்கத்தால் குடிநீர் பிரச்சனை தலை விரித்தாடுகிறது ஆனால் மாநகராட்சியில் மட்டும் இதுவரை குடிநீர் தட்டுப்பாடு என்பது இல்லாத சூழ்நிலை இருந்து வருகிறது. தமிழகம் முழுவதும் குடிநீர் கட்டுப்பாடு ஆனால் தூத்துக்குடி மாநகராட்சியில் மட்டும் தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி மேற்கொண்டு வந்த தின் அடிப்படையில் தான் குடிநீர் தட்டுப்பாடு என்பது இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில் மாநகராட்சி பகுதியில் நிலத்தடி நீர் எடுத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது டுவிபுரம் வி.வி.டி சிக்னல் சர்வீஸ் ரோட்டில் இரண்டு இடத்தில். ராஜீவ் நகர் மூன்றாவது தெருவில் மடத்தூர் செல்லும் சாலையில் ஒரு இடம் உள்ளது. இதுபோல தூத்துக்குடி மாநகராட்சியை பொறுத்தவரை 20க்கும் மேற்பட்ட இடங்களில் நிலத்தடி நீர் எடுத்து விற்பனை செய்யப்படுகிறது

ஆனால் ஒரு சில இடங்களில் நிலத்தடி நீர் என்று கூறிக்கொண்டு மாநகராட்சி வழங்கும் குடிநீரை விற்பனை செய்யப்படுகிறது ஆனால் இது தொடர்பாக தொடர்ந்து மாநகராட்சி ஆணையருக்கு புகார் தெரிவித்தும் மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆய்வு செய்கிறோம் என்ற பெயரில் ஆய்வு மட்டும் செய்துவிட்டு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் மௌனம் காத்து வருகின்றனர் காரணம் என்ன என்று தெரியவில்லை இதே நிலைமை தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட நிலத்தடி நீர் விற்பனை நிலையங்கள் தொடர்ந்து செயல்பட்டால் வரும் காலத்தில் மாநகராட்சிக்கு குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது

ஏற்கனவே ஆணையராக இருந்த பல ஆணையர்கள் நீர் விற்பனை நிலையத்திற்கு சீல் வைத்தனா். ஆனால் தற்போது மாநகராட்சி ஆணையராக இருக்கும் ப்ரியங்கா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது குறிப்பாக பல மாமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

ஆகையால் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் தூத்துக்குடி மாநகரில் இயங்கும் நிலத்தடி நீர் விற்பனை நிலையங்களை உடனடியாக மூடுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் கோரிக்கையாகவே உள்ளது.

நிலத்தடி நீர் என்ற பெயரில் ஒவ்வொரு நிறுவனமும் லாரிகள் மூலம் சிறிய வாகனங்கள் மூலம் ஹோட்டல். டீ ஷாப் உள்ளிட்ட கடைகளுக்கும் திருமணங்கள் போன்ற விசேஷங்களுக்கும் இந்த நீர் விற்பனை செய்யப்படுகிறது ஆகையால் இதற்கு நிரந்தரமாக மாநகராட்சி அதிகாரிகள் தீர்வு காண வேண்டும் என்பதுதான் கோரிக்கையாகவே உள்ளது. நடவடிக்கை மாநகராட்சி நிர்வாகம் எடுக்குமா இல்லை வழக்கம் போல மௌனம் காக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *