செய்தியாளர் ராஜாராம் குமார்

பெரம்பை: விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பெரம்பை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராயணசாமி வரதராஜ பெருமாள் ஆலயத்தில், இன்று புரட்டாசி மாத நான்காம் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.

இதையொட்டி, பெருமாளுக்குப் பன்னீர் அபிஷேகம், புஷ்ப அபிஷேகம், சந்தன அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, சுவாமிக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

இந்த வழிபாட்டில் பெரம்பை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு, அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராயணசாமி வரதராஜ பெருமாளைத் தரிசனம் செய்து இறையருள் பெற்றுச் சென்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *