எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி மாணவர்கள் மாநில அளவில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பு..

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மூலம் ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படுகின்ற குழு விளையாட்டுப் போட்டிகளில் 19 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் கலந்து கொள்ளும் 41 வது மாநில அளவிலான பாரதியார் தின குழு விளையாட்டு போட்டிகள் திருவண்ணாமலை பள்ளி கல்வித்துறை பிரிவின் சார்பில் பல்வேறு மையங்களில் அனைத்து விதமான குழு விளையாட்டு போட்டிகள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நடைபெற்று வருகிறது

இதில் சீர்காழி, ச. மு. இ. மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் 19 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொள்ளும் மாணவர்கள் ஹாக்கி அணி மற்றும் கூடைபந்தாட்ட அணி இக்கல்வி ஆண்டில் சீர்காழி குறுவட்ட விளையாட்டுப் போட்டிகளில் முதல் இடம் பெற்றும், மயிலாடுதுறை மாவட்ட அளவில் நடைபெற்ற குழு விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெற்று தற்போது நடைபெறுகின்ற மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்,

இவர்கள் மயிலாடுதுறை வருவாய் மாவட்டத்தின் பிரதிநிதிகளாக மாநில போட்டியில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கதாகும், மேலும் இப்பள்ளியை சார்ந்த 19 வயதுக்கு உட்பட்ட மாணவியர்களின் அணியில் கூடைப்பந்தாட்டம் மற்றும் பூப்பந்தாட்ட அணிகள் கலந்து கொண்டு சிறப்பித்த மாணவ மாணவிகளையும், பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் டி.முரளி,பி. மார்கண்டன்,எஸ். சக்திவேல், ஆர். ராகேஷ், ஆர். கபிலன் ஆகியோர்களை பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். முரளிதரன் , உதவி தலைமை ஆசிரியர் என். துளசிரங்கன், மூத்த முதுகலை ஆசிரியர் வி. முருகபாண்டியன் ஆகியோர்கள் ரயில் நிலையம் சென்று மாணவ மாணவிகளை வெற்றி பெற வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்

இதற்கு முன்னதாக பள்ளியின் செயலாளர் வி. சொக்கலிங்கம்,பள்ளி நிர்வாக குழு தலைவர் ஆர். சிதம்பரநாதன். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம்.கபாலி ஆகியோர் பாராட்டி வாழ்த்தி மாணவர்களை அனுப்பி வைத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *