தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ. லியோ யாக்கோப் ராஜ்.

தஞ்சாவூர், அக்- 24. தஞ்சாவூர்-வல்லம் சாலையில் உள்ள A to z மருத்துவமனையின் மற்றொரு பங்குதாரரான மருத்துவர் ராமசாமி மனைவி ஜெயஸ்ரீயின் பவர் ஏஜண்டு எனகூறி கீழ வஸ்த்தா சாவடி குமார் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அளித்த பேட்டியில் அவர் கூறியது:-

ஜெயஸ்ரீயின் பவர் ஏஜண்டானாகீழ வஸ்த்தா சாவடியில் குடும்பத்துடன் வசித்து வரும் குமார் ஆகிய நான், எனது நண்பர் ராமசாமி என்பவர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். பணி நேரம் முடிந்தபிறகு மீதமுள்ள நேரத்தில் அவரது மனைவி ஜெயஸ்ரீ பங்குதாரராக இருக்கும் A to Z மருத்துவமனையில் தனியார் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அவர்களால் மருத்துவமனை நிர்வாகத்தை சரிவர கவனிக்க முடியாததால் மேற்படி மருத்துவமனையின் நிர்வாக பொறுப்பை அதிகாரப்பூர்வமாக எனக்கு வழங்கியுள்ளார்கள்.

எனது நண்பர் ராமசாமி அவர்களின் மகள் பூஜா மற்றும் மருமகன் ராம்ஜி ஆகியோர்கள் Our Lady மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில் ராமசாமி மனைவி ஜெயஸ்ரீ பங்குதாராக இருந்து வந்த தஞ்சாவூர்-வல்லம் சாலையில் அமைந்துள்ள A to z மருத்துவமனையில் அவருக்கும் மற்றொரு பங்குதாரரான ராமன் மகன் சரவணன் என்பவருக்கும் பங்குத்தொகையில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக காவல்துறை உயர் அதிகாரிகளிடம் மனு கொடுத்து அது சம்பந்தமாக விசாரணை செய்து வந்தார்கள்.

அதில் மேற்படி ஜெயஸ்ரீ மற்றும் சரவணன் ஆகிய இருதரப்பினரும் ஒத்துப்போவதால் எனது நண்பர் ராமசாமி அவரது மனைவி ஜெயஸ்ரீ இருவரும் மேற்படி மருத்துவமனையில் இருந்து பங்குதாரர் மற்றும் மருத்துவத்தொழிலிருந்து விடுபடுவதாக முடிவெடுத்து, அது தொடர்பாக நடுநிலையாளர் வைத்து பேசி அதன்படி கடந்த 21.08.2026 அன்று ஒரு பதிவு செய்யப்படாத எழுத்துமூலமான உடன்படிக்கையை எற்படுத்திக்கொண்டு அதன்படி ஜெயஸ்ரீ மேற்படி தனியார் மருத்துவமனையில் பங்குதாரர் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வதென ஒத்துக்கொண்டு அதற்கான அவரது பங்குத்தொகை ரூபாய்-24,00,0000 கோடி என நிர்ணயம் செய்து மேற்படி தொகையில் ருபாய் 5 கோடி மட்டும் முன்பணமாக அன்றைய தேதியில் கொடுப்பதாக கூறி அதில் 1 கோடி 75 லட்சத்திற்கு காசோலையாகவும் மீதித்தொகையான 3 கோடி 25 லட்சத்தை ரொக்கமாக தருவதாகவும் மீதமுள்ள தொகையை பங்குத்தாரான சரவணன் ஜெயஸ்ரீ வசம் வருகிற 20.11.2026 தேதிக்குள் கொடுத்து தீர்ப்பது என பேசி முடிவு செய்து கொண்டார்கள்.

அவ்வாறு அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையை நடுநிலையாளர் வைத்து பேசும்போது ஜெயஸ்ரீ தரப்பில் ஒரு வழக்கறிஞரையும் அதே போல் பங்குதாரரான சரவணன் தரப்பில் கோயம்புத்தூரில் வழக்கறிஞராக பணியாற்றும் விஜயராகவன் மற்றும் தஞ்சாவூரில் வசித்து வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் அவரது சக வழக்கறிஞரான கோ.இன்னிசை அவர்களும் வழக்கறிஞராக இருதரப்பிற்கு இடையே ஆலோசனை வழங்கினார்கள். கடந்த 21.08.2026 அன்று ஏற்பட்ட எழுத்துபூர்வமான உடன்படிக்கை படி நிர்ணயிக்கப்பட்ட முன்தொகை 5 கோடியில் ருபாய் 1 கோடி 75 லட்சத்திற்கு காசோலையாவும், மீதித்தொகையான 3 கோடி 25 லட்சத்தை ரொக்கமாக அன்றைய தினமே பங்குதாரரான சரவணனிடமிருந்து எனது நண்பர் இராமசாமி மனைவி ஜெயஸ்ரீ அவரது மருமகன் ராம்ஜி மற்றும் எனது முன்னிலையில் மேற்படி தொகையை பெற்றுக் கொண்டார்.

அவர் பெற்ற ரூபாய் 5 கோடி தொகையை பாதுகாப்பு கருதி மேற்படி வழக்கறிஞரான இன்னிசை அலுவலகத்தில் வைத்து பெற்றுக்கொள்வதென இருதரப்பும் ஒப்புக்கொண்டு அதன்படி. வழக்கறிஞரான இன்னிசை அலுவலகத்தில் வைத்து பணத்தை எங்கள் முன்னிலையில் பெற்றுக் கொண்டார். ஆனால் மேற்படி வழக்கறிஞரான இன்னிசையின் கணவரான காவல் ஆய்வாளராக பணிபுரிந்து இந்த வழக்கில் தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் சுகுமார் தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்ததாலும் பணபரிமாற்ற சமயத்தில் அவர் வீட்டில் இருந்த காரணத்தாலும் மேலும் பாதுகாப்பு கருதி அவரது முன்னிலையில் வைத்து பெற்றுக்கொண்டோம். அவ்வாறு இருதரப்பினரும் கலந்து பேசி தான் முடிவெடுத்து எழுத்துபூர்வமான உடன்படிக்கை எற்படுத்தி கொண்டதோடு அதேபோல் இருதரப்பினரது பாதுகாப்பு கருதி தொகையை வழக்கறிஞரான இன்னிசை அவர்களின் குடியிருப்பு வீட்டில் அமைந்துள்ள வழக்கறிஞர் அலுவலகத்தில் வைத்து பெற்றுக்கொண்டோம்.

அதனால் இருதரப்பினருக்கிடையே ஏற்படுத்திக்கொண்ட கிரய உடன்படிக்கை மற்றும் தொகையை பெற்று கொண்டதில் யாரும் எங்களையோ எனது நண்பர் ராமசாமி மற்றும் அவரது மனைவி ஜெயஸ்ரீ ஆகியோரை அச்சுறுத்தியோ மிரட்டியோ ஏற்படுத்தப்பட்டது அல்ல. அதனால் 21.08.2026 தேதியிட்ட ஒப்பந்தபடி ஜெயஸ்ரீ ரூபாய் 5 கோடி பெற்றுக்கொண்டது உண்மையானதாகும். இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டதில் யாருடைய தூண்டுதலோ அச்சுறுத்தலோ இல்லை. மேலும் மேலும் மருத்துவமனையின் பங்குதாரரான ஜெயஸ்ரீக்கு அவரது மருமகன் முன்னிலையில் பங்குதாரர்கள் சரவணன் அவருடைய ஆதரவாளர்கள் முன்னிலையில் மூணே கால் கோடி ரூபாய் பணமும் மீதம் ஒரு கோடியே 75 லட்சத்திற்கான காசோலையும் 10 பேர் பெயரில் சரவணன் என்பவர் கொடுத்தார்

இந்த பணம் பங்குதாரர்களுக்கு கிடைக்கக்கூடிய பணம் மீதம் 19 கோடி மூணு மாதத்திற்குள் கொடுத்து விடுவதாக அனைவரும் முன்னிலையிலும் சரவணன் வாக்குமூலம் கொடுத்து உள்ளார். இந்த பணம் காவல்துறைக்கு இதுக்கும் சம்பந்தமே இல்லை காவல்துறை கலங்கம் ஈடுபடுத்தும் நோக்கத்தில் சரவணன் செயல் பட்டு உள்ளனர் அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது அதை நாங்கள் நீதிமன்றம் மூலம் சமர்ப்பிப்போம் மேலும் இந்த வழக்கை சிபிஐ லஞ்ச ஒழிப்புத்துறை வருமானவரித்துறை அமலாக்கத்துறை நேரடியாக தலையிட்டு ஆய்வு செய்து விசாரிக்க வேண்டும் எனும் தெரிவித்தார் பவர் ஏஜனான குமார் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *