எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஜலேந்திரன் (58), அவரது மனைவி மலர்ச்செல்வி(48)மகன் அதிகுணன் (23).இந்நிலையில் நேற்று இரவு கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
மகன் ஆதிகுணன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்துள்ளார்.அப்போது தகராறு காரணமாக ஆத்திரம் அடைந்த ஜலேந்திரன் வீட்டில் இருந்த இரும்பு பைப்பால் மகன் மற்றும் மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.இதனை தொடர்ந்து ஜலேந்திரன் வீட்டின் அருகில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். காலை வெகுநேரம் வீடு திறக்கபடாமல் இருந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போதுதான் மூவரும் உயிரிழந்தது தெரியவந்தது.இதனை தொடர்ந்து சீர்காழி போலிசாருக்கு கிராமமக்கள் தகவல் கொடுத்தனர்.அதன் பேரில் போலீசார் மூவரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிநேக பிரியா நேரில் விசாரணை மேற்கொண்டார்.குடும்ப தகராறு காரணமாக மனைவி மகனை கொன்று கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருமுல்லைவாசல் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.