எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

வேலை செய்ய விருப்பமில்லை என்றால் இடமாற்றம் செய்திடுங்கள்” – சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் அதிகாரிகளுக்கு அமைச்சர் வெங்கட்ரமணன் எச்சரிக்கை!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் மீனவர் கிராமத்தில் உள்ள முகத்துவாரப் பகுதியில் மணல் திட்டுக்கள் குவிந்து, நீண்ட நாட்களாகத் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் படகுகளை இயக்க முடியாமலும், கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல முடியாமலும் மீனவர்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


இதுகுறித்து மீனவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது திருமுல்லைவாசல் மீனவர்கள் இடையே அமைச்சர் தூர்வாசல் சம்பந்தமாக தூண்டில் வளைவு நீலப்படுத்துதல், முகத்துவாரம் மணல் தீட்டுகளை அகற்ற வேண்டும், மணல் தீட்டுகளை ஆழப்படுத்த வேண்டும் கோரிக்கை வைத்தனர்,

அப்போது அதிகாரிகள் பணிகளின் தாமதம் மற்றும் தூர்வாரும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்த அவர், உரிய அதிகாரியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பணிகளை உடனடியாகத் தொடங்க உத்தரவிட்ட அவர், “வேலை பார்க்க விருப்பமில்லை என்றால் இடமாற்றம் ட்ரான்ஸ்ஃபர் செய்திடுவேன், வேறு ஒருவரை நியமித்துக் கொள்ளலாம்” என்று கறாராக எச்சரித்துப் பேசினார். அமைச்சரின் இந்த அதிரடி பேச்சால் அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்தவர்கள் அதிர்ச்சியும் கலக்கமும் அடைந்தனர்.


இதனைத் தொடர்ந்து, முகத்துவாரத்தை தூர்வார நிதி ஒதுக்கி உடனடியாக உத்தரவிட்டார், மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் அமைச்சர் உறுதி அளித்தார். இதில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *