சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் டாக்டர் முத்தூஸ் மருத்துவமனை சார்பில், செண்பகபுதூர் ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தமிழ்ச்செல்வி கலந்து கொண்டார். மேலும், தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகி பவுல்ராஜ், கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் வரதராஜ், செண்பகபுதூர் ஊராட்சியின் முன்னாள் மன்றத் தலைவர் சின்னச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும், ஊர் பொதுமக்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சேவைகள் கிடைக்கும் வகையில் நடைபெற்ற இம்முகாம் அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *