கோவை காந்திபுரம், பகுதியில் செயல்பட்டு வரும் , ஃபேஷன் ஆர்ட் இன்ஸ்டிடியூட் சார்பாக , பெண்களின் திறமைகளையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்தும் நோக்கில்ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது…
இதன் தொடர்ச்சியாக தொடர்ந்து ஒண்பதாவது ஆண்டாக ஃபேஷன் ஆர்ட் ஃபெஸ்ட் (Fashion Art Fest) நிகழ்ச்சி பிராட்வே அரங்கில் நடைபெற்றது ஃபேஷன் ஆர்ட் இன்ஸ்டிடியூட் இயக்குநர் சுகுணா சண்முகம் தலைமையில் ,நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஐந்து வயது குழந்தைகள் முதல் இளம்பெண்கள் மற்றும் பெரியவர்கள் வரை பலரும் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சியில், பல்வேறு வண்ணங்கள், வடிவமைப்புகள் மற்றும் நவீன பாணிகளில் உருவாக்கப்பட்ட ஆடைகள் அணிவகுப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டன.பாரம்பரிய ஆடை வடிவமைப்புகள் முதல் நவீன காலத்திற்கு ஏற்ற ஆடை அலங்காரங்கள் வரை பல்வேறு வகையான படைப்புகள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன.
இந்த ஆடை அலங்கார அணிவகுப்பில் ஆடை வடிவமைப்பாளர்கள் மற்றும் அலங்கார நிபுணர்கள் பங்கேற்றனர்.இதில் 100க்கும் மேற்பட்ட ஆடை வடிவமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன்,பல்வேறு வகையான போட்டிகளும் நடத்தப்பட்டன.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பல்வேறு துறைகளில் சாதித்து பெண் தொழில் முனைவார்கள்,ஜெயா மகேஷ், ஷைனி,லீமா, ரைஹானா,,பாலாமீனா,மற்றும் யாகனா குழுமங்களின் நிறுவனர் கவுதமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியை என்.ஐ.ஈவெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜா தொகுத்து வழங்கினார்..
நிகழ்ச்சி குறித்து ஃபேஷன் ஆர்ட் இன்ஸ்டிடியூட் இயக்குநர் சுகுணா சண்முகம் பேசுகையில்,
ஆடை வடிவமைப்புத் துறையில் ஆர்வமுள்ள பெண்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கும், புதிய வடிவமைப்புகளை அறிமுகப்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பாக தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக இந்நிழ்வை நடத்தி வருவதாக தெரிவித்தார்…
குறிப்பாக இதில் எங்களது பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் பெண்கள் ஆடைகளை டிசைன் செய்து வடிமைத்துள்ளதாகவும்,இதனால் பெண்களின் படைப்பாற்றலை ஊக்குவிப்பதோடு, ஆடை வடிவமைப்புத் துறையில் அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கி சிறந்த தொழில் முனைவோராக மாற்றுவதே நோக்கம் என தெரிவித்தார்.