தேனி: தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் வ. சிவ கிருஷ்ணமூர்த்தி பொதுமக்களிடமிருந்து 337 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, புதிய வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு மற்றும் இதர கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. மேலும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் மாவட்ட ஆட்சியர் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களைச் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கிய மாவட்ட ஆட்சியர், மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, ஊழல் தடுப்பு வார விழிப்புணர்வு உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப. ராஜகுமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மகேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் இராமகிருஷ்ணன், பொது தனித்துணை ஆட்சியர் ச.பா.தி. கவிதா, மாவட்ட வழங்கல் அலுவலர் நல்லையா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *