திருப்பத்தூர்: ஆசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்ற திருப்பத்தூரைச் சேர்ந்த இளம் வீராங்கனை யாஷினிக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. பன்னாட்டு லயன்ஸ் கிளப் மற்றும் நண்பர்கள் இணைந்து ஏற்பாடு செய்த விழாவில், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திருப்பதி கலந்து கொண்டு யாஷினியைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தார்.சதுரங்கப் போட்டியில் சிறப்பாக விளையாடி மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்த யாஷினி, மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.