கத்தோலிக்க திருச்சபையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தை மாதாவுக்கு உகந்த மாதமாக கடை பிடித்து வருகின்றனர்.

இந் நாட்களில் ஒவ்வொரு கிறிஸ்தவ ஆலயங்களிலும், கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளிலும் ஜெபமாலை பிரார்த்தனை நடத்துவது வழக்கம். அதன்படி மதுரை உயர்மறை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஜெபமாலை பிரர்த்தனை நடந்தது.

மாலையில் திருப்பலி முடிந்தவுடன் மாதாவுக்கு முன்பாக அமர்ந்து ஜெபமாலை பிரார்த்தனை நடத்தினர். அதேபோன்று தங்களது வீடுகளிலும் தினமும் ஜெபமாலை பிரார்த்தனையை நடத்தி வருகின்றனர். மதுரை அஞ்சல் நகர் இடைவிடா சகாய அன்னை ஆலயத்தில் 40-க்கும் மேற்பட்ட சிறுமியர் மாதா வேடம் அணிந்து ஆலயத்தின் வாசலில் இருந்து ஊர்வலமாக சென்றனர். பின்னர் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *