கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டம், வெப்பாலம்பட்டி: ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் வெப்பாலம்பட்டி கிளை சார்பில் இன்று ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிறப்பு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ராஜேஷ் மற்றும் மாவட்டப் பொருளாளர் சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, ஐயப்ப பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் கிருஷ்ணகிரி மாவட்டம், வெப்பாலம்பட்டி கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *