கோவை
– பிரமிக்க வைக்கும் 1,300-க்கும் மேற்பட்ட சேலை ரகங்கள்..
கோவையில் ‘பிரேமம் ஆபரணம்’ என்ற புதிய நகைப் பிரிவின் அறிமுகம் மற்றும் தீபாவளி சிறப்புச் சேலைகள் கண்காட்சி தொடங்கியுள்ளது. கோவை ரெசிடென்சி டவர்ஸ் வளாகத்தில் அக்டோபர் 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில், பல்வேறு வகையான தங்க நகைகள், வைர ஆபரணங்கள் மற்றும் 1,300-க்கும் மேற்பட்ட சேலை ரகங்கள் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து ஸ்வர்ணமுகி ரகுபதி கூறுகையில், கோவையில் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்ட ‘பிரேமம் சில்க்ஸ்’ நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்களிடம் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது ‘பிரேமம் ஆபரணம்’ என்ற புதிய நகைப் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தினசரி அணியும் எளிய நகைகள் முதல் பிரத்யேக வடிவமைப்புகளைக் கொண்ட ஆபரணங்கள் வரை பல்வேறு ரகங்கள் இங்கு இடம்பெற்றுள்ளன. லேப்-குரோன் வைரங்கள், இயற்கை வைரங்கள் மற்றும் தங்க நகைகள் என ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலை கொண்ட நகைகள் முதல் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய பிரத்யேக ஆபரணங்கள் வரை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பனாரஸ், காஞ்சிபுரம் உள்ளிட்ட பாரம்பரிய ரகங்களில் 1,300-க்கும் மேற்பட்ட சேலை வடிவமைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. பெண்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு வண்ணக் கலவைகள் மற்றும் உயர்தரத் துணி வகைகளில் சேலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பண்டிகைக் காலத்தில் நகைகள் மற்றும் பாரம்பரிய சேலைகளை ஒரே இடத்தில் தேர்வு செய்யும் வகையில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.