மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மழைக்கோட், போர்வை, பிரியாணி மற்றும் இனிப்புகள் வழங்கி கௌரவிப்பு

தாம்பரம்: வடகிழக்குப் பருவமழையால் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையிலும், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வரும் தாம்பரம் மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்கள் 100 பேருக்கு, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தாம்பரம் மாநகராட்சியின் 50-வது வார்டுக்கு உட்பட்ட ரங்கநாதபுரத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் தாம்பரம் எம். யாக்கூப் கலந்துகொண்டு, தூய்மைப் பணியாளர்கள் 100 பேருக்கும் மழைக்கோட், போர்வை, பிரியாணி மற்றும் இனிப்புகளை வழங்கி கௌரவித்தார்.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், பொதுமக்களின் நலன் கருதி தொடர்ந்து பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டும் வகையிலும், அவர்களுக்கு உதவும் நோக்கிலும் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் அப்துல் ரஹீம், பொருளாளர் சபியுல்லா, மாநில இளைஞரணிச் செயலாளர் தமீமும் அன்சாரி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நலத்திட்ட உதவிகளைப் பெற்றுக்கொண்ட தூய்மைப் பணியாளர்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *