தூத்துக்குடி சட்ட ஒழுங்கு சீர்கேடு பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து ஓருங்கிணைந்த தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் அக்டோபர் 31 சனிக்கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது


தமிழகத்தில் கொலை கொள்ளை போதை பொருள் விற்பனை ஆகியவை அதிகாித்து சட்டம் ஒழுங்கு பொியளவில் சீர்கெட்டு இருப்பதோடு பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, கடத்தல் அதிகரித்து, தமிழகத்தை பாதுகாப்பற்ற மாநிலமாக இந்த ஆட்சி கொண்டு வந்திருக்கிறது. இதுபோன்ற குற்றச்செயல்களில் தவெகவினா் பொியஅளவில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இந்த அரசு பெண்கள் பாதுகாப்பு, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆவின் பால் விலையை அரசே உயர்த்துகிறது. அதனால் தலைமை கழக ஆணைப்படி தவெக அரசை கண்டித்து வருகிற 31.10.2026 காலை 10 மணிக்கு சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் எதிரில், நாம் தமிழர் வளாகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.


இதில் வடக்கு, தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணி, தொண்டரணி, உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *