தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ. லியோ யாக்கோப் ராஜ்.

தஞ்சாவூர் அக்- 30. தஞ்சாவூர் அருகே வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) நிலையனை எதிர்காலத்திற்கான அறிவியல் சார்ந்த தொழில்நுட்ப அறிவியல் கண்காட்சி 29-10.2026 முதல் 30.10.2026 வரை விழா பல்கலைக்கழகத்தின் உள்விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேபி கண்காட்சியினை தொடங்கி வைத்தார். பல்கலைக்கழக இணைதுணை வேந்த ஆர் மல்லிகா, பல்கலைக்கழக பதிவாளர் பி.கே.ஸ்ரீவித்யா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

9 வகுப்பு முதல் 12- வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் 25- மேற்பட்ட கல்வி நிறுவனங்களிலிருந்து 300 காட்சிப்படுத்தினர். மேற்பட்ட படைப்புகளை மாணவர்கள் இதன் சிறப்பு அம்சம்மாக அறிவியல் காட்சிகளான கோலரங்கம், முப்பரிமாண அரங்கத்தோற்றம், AR & VR zhone, கேமிங் மற்றும் ரோபாட்டிக்ஸ் சார்ந்தவைகள் இடம்பெற்றன.

இவ்அறிவியல் கண்காட்சியில் சிறந்து விளங்கும் அறிவியல் படைப்புகளுக்கான பரிசினை புதுச்சோரி அருணா மருத்துவ பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் வி.அழகரசன் ரூ.1.லட்சத்திற்கான பரிசினை அன்பரசன் நினைவாக வழங்கப்பட்டது. இக்கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி இணை துணைவேந் அவர்கள் மாணவர்கள் தன்னம்பிக்கை வளர்க்க வேண்டும். பெரியாரின் வாழ்வியல் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *