கரூர் செய்தியாளர் மரியான் பாபு
பா.ஜ.க தேர்தல் ஆலோசனை கூட்டம்..
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியத்தின் நிர்வாகிகள்,சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் முதற்கட்ட தேர்தல் ஆலோசனை கூட்டம் ஒன்றிய தலைவர் கவுன்சிலர் S.கோபிநாத் தலைமையில் நடைபெற்றது மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன் முன்னிலை வகித்தார் .
சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க கரூர் மாவட்ட செயலாளரும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி அமைப்பாளருமான காவேரி மோகன்ராஜ் கலந்துகொண்டு தேர்தல் தொடர்பாக பேசுகையில் பா.ஜ.க கரூர் மாவட்ட தலைவர் V.V செந்தில்நாதன் கூறியதுபோல் இளைஞர்கள்அரசியல் அனுபவம் கொண்ட கார்யகர்த்தாக்களை நேரடியாக சந்தித்து தேர்தலுக்கு தயார் படுத்துதல்,ஒன்றிய நிர்வாகிகளுக்கு தேர்தல் புத்தாக்க பயிற்சிஅளித்தல் தேர்தல் எனும் திருவிழாவினை மக்கள் அனைவரும் பணநாயகம் தவிர்த்து உண்மையான ஜனநாயக முறையில் முடிவெடுத்து கொண்டாடுவதற்கு பாரத பிரதமர் நரேந்திரமோடி-யின் நல்லாட்சி குறித்த மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை வீதிகள் தோறும் வாக்காளர்களிடம் எடுத்துச்செல்லுவது போன்றவற்றை நிச்சயம் செயல்படுத்தி தாமரைக்கான வெற்றியினை மாவட்ட தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என கூறினார்.
அதுமட்டுமின்றி உறுப்பினர் சேர்க்கையினை துரிதப்படுத்தி மாவட்டத்தில் 5வது இடத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியம் முதலிடத்தினை நோக்கி முன்னேறவும் ஒன்றியத்தில் அணி பிரிவு நிர்வாகிகள் நியமனத்தினை இந்த இரண்டு மூன்று தினங்களில் துரிதப்படுத்தி நிறைவு செய்ய மண்டல் தலைவருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய அவசியம் குறித்தும், எதிர்வரும் 29.11.2025 ல் கும்பகோணத்தில் நடக்கும் அணிபிரிவு நிர்வாகிகள் சங்கமம் மாநாட்டில் தொகுதியில் அணிபிரிவு பொறுப்பில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொள்வது அவசியம் எனவும் எடுத்துரைத்தார்.
கூட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள்,சக்திகேந்திர பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.