தென்காசி மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலங்குளம் வடகிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊத்துமலை மற்றும் தட்டப்பாறை கிராமங்களில், ஒன்றிய செயலாளர் வேல்ராஜ் தலைமையில், தட்டாப்பாறை கிளைக் கழக நிர்வாகி எம். ஐயாதுரை
பாண்டியன் ஏற்பாட்டில் பசும் பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119- ஆம் ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் தமிழக வெற்றிக் கழக கொடி யேற்று விழா சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிகளில், தென்காசி மத்திய மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் அபூபக்கர்சித்திக்
தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் அபூபக்கர் சித்திக்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முகமதுகான் ராபின் , அப்துல் ரசாக், தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் நரேன், இளைஞர் அணி இணை அமைப்பாளர் பிரகாஷ், தென்காசி டைகர் முருகன், கீழப்பாவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், மேலகரம் பேரூர் கழக செயலாளர் ஹரிஹரன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் முத்துக் குமார் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சரஸ்வதி தென்காசி நகர செயலாளர் பஷீர் சுரண்டை நகர செயலாளர் கணேசன்,சமீர்ரிஸ்வான் மற்றும்
கிளை கழக செயலாளர்கள் ருக்குமணியம்மாள் புரம் செல்வம், கே. நவநீத கிருஷ்ணபுரம் சரவணன் , நாச்சியார்புரம் மாரிசெல்வம், தட்டப்பாறை கனகராஜ், முருகராஜா , அழகுதுரை,
இசக்கிதுரை, சுனில்குமார் , பரமேசுவரன், உள்ளிட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி, ஊத்துமலையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, தட்டப்பாறை கிராமத்தில் உள்ள தேவர் திருமகனாரின் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தட்டப்பாறை கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும், சமூக நலனை முன்னிறுத்தும் வகையில், வடக்கு காவலாகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட பெண் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் சேலைகள் வழங்கப்பட்டன.
இவ் விழாவிற்கான ஏற்பாடுகளைத் தட்டப்பாறை கிளைக் கழக நிர்வாகி எம். ஐயாதுரை பாண்டியன், சிறப்பாகச் செய்திருந்தார்.
தேவர் திருமகனாரின் தியாகம், வீரம் மற்றும் சமூகப் பங்களிப்பைப் போற்றும் வகையிலும், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொது மக்களிடையே ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் வகையிலும் இவ்விழா சிறப்பாக அமைந்தது.