கல்பாக்கம் நவ 1
சென்னை ஆவடியில் இயங்கி வரும் வான்புகழ் வள்ளுவர் முத்தமிழ் சங்கத்தின் சார்பில் சங்கத்தின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழா குறள் நெறி நல்லாசிரியர் விருது மற்றும் தமிழ்ச் சான்றோர்களுக்கு விருது என முப்பெரும் விழா நேற்று 31 ஆம் தேதி சனிக்கிழமை மாலை திருமுல்லைவாயல் முதல்வர் படைப்பகத்தில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு நிறுவனத் தலைவர் பொறியாளர் பால.இரகுபதி தலைமை தாங்கினார்.
சென்னை செந்தில் வரவேற்புரையாற்றிய இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சிதுறை மேனாள் இயக்குனர் கோ. வெற்றிவேந்தன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சிறப்பாகத் தமிழ்ப் பணி ஆற்றிவரும் மூத்த பத்திரிகையாளர் அகநம்பி தி. பாலசுப்பிரமணியம், பத்திரிகையாளர் சபரி மோகன் ஆகியோருக்கு குறள்நெறி தமிழ்ச் செம்மல் விருதும், பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குறள் நெறி நல்லாசிரியர் விருதும் வழங்கி வாழ்த்தினார்.
நிகழ்வில் மூத்த பத்திரிகையாளர் கி. விடாரண்யம், பிரைட் இந்தியா 2020 அறக்கட்டளை நிறுவனத்தலைவர் த. நந்தகுமார்,தாமோதரன், ஜனனி, விஜயஸ்ரீ, மருத்துவர் சந்தோஷ்ராஜ், யாகிஷ்வரன், எஸ். முரளி, து.சண்முகம், பி வி சுமதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திருக்குறளைத் தேசிய நூலாக அறிவித்தல் பருத்திப்பட்டு பூங்காவில் திருவள்ளுவர் திருவருவச் சிலை நிறுவுதல் தமிழில் கல்வி பயில்வோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கடைகளில் தமிழ்ப்பெயர் முதன்மையாக்குதல் உட்பட பல்வேறு தீர்மானங்களை ஆவடி நூர்ஜஹான் வாசித்தார்.நிகழ்ச்சியை கவிஞர் இனியன் வெ. பாலாஜி தொகுத்து வழங்க ஆவடி சூர்யகலா நன்றியுரை ஆற்றினார்