தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம்,
திருப்பூர் மாவட்டம், குண்டடம் கெத்தல் ரேவ் ஊராட்சிப் பகுதியில் இன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட குண்டடம் காவல் நிலைய ஆய்வாளர் விவேக், பொதுமக்களிடையே குற்றத் தடுப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
மேலும், கிராமப்புறங்களில் நடைபெறும் குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்கும், போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டை ஒழிப்பதற்கும் பொதுமக்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்த கிராம சபைக் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு காவல்துறையினர் வழங்கிய விழிப்புணர்வு அறிவுரைகளைக் கேட்டறிந்தனர்.
மேலும், கிராமப்புறங்களில் ஏதேனும் குற்றச் சம்பவங்கள் அல்லது போதைப்பொருள் தொடர்பான தகவல்கள் கிடைத்தால் உடனடியாக காவல் நிலையத்தை அணுகி புகார் அளிப்பது குறித்தும், காவல்துறை மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது