சென்னை, நவம்பர் 1:

தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நவம்பர் 1-ஆம் தேதி, 1956-ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டதுடன், கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும். இந்த இணைப்புப் போராட்டத்தில் குமரித் தந்தை மார்ஷல் ஏ. நேசமணி அவர்கள் முக்கியப் பங்காற்றினார். அவரது பங்களிப்பை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 1-ஆம் தேதி கன்னியாகுமரி மீட்பு நாள் மற்றும் குமரி இணைப்பு நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி, சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் அவர்கள், குமரித் தந்தை மார்ஷல் ஏ. நேசமணி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் சமத்துவ மக்கள் கழக மாநிலப் பொருளாளர் வழக்கறிஞர் கண்ணன், தலைமை நிலையச் செயலாளர் தங்கமுத்து, மாநில செயற்குழு உறுப்பினர் முருகவேல், நாடார் பேரவை வடசென்னை மாவட்டத் தலைவர் சீனிவாசன், சமத்துவ மக்கள் கழக ஆர்.கே. நகர் பகுதி கழகச் செயலாளர் ராஜேஷ், மாவட்டப் பொருளாளர் சுடலைமணி, மத்திய சென்னை அருண் ராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் ஜெகா ஆனந்தவேல், ராயபுரம் பகுதி பொருளாளர் சங்கரபாண்டியன், நாடார் பேரவை ஆர்.கே. நகர் பகுதி செயலாளர் பாக்யராஜ், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் ஆனந்தி, பொருளாளர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *