மன்னார்குடி., நவ.02-

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள பரவக்கோட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில், 1986 முதல் 1994-ஆம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து 40-ஆம் ஆண்டு நினைவு சந்திப்பு விழாவை வெகு உற்சாகமாகக் கொண்டாடினர். பல ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுடன் பள்ளியில் படித்த நண்பர்களை மீண்டும் சந்தித்த முன்னாள் மாணவர்கள், ஒருவரையொருவர் அன்புடன் வரவேற்று மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர். தொடர்ந்து, தங்களது பள்ளிப் பருவத்தில் நடைபெற்ற இனிமையான சம்பவங்கள், ஆசிரியர்களின் அறிவுரைகள், நண்பர்களுடன் கழித்த மறக்க முடியாத தருணங்கள் உள்ளிட்ட பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.


இந்தச் சந்திப்பு விழாவில் முன்னாள் மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த பாடல்களைப் பாடி, உற்சாகத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், நண்பர்களுடன் இணைந்து உரையாடியும், பழைய நினைவுகளை நினைவுகூர்ந்தும் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். பள்ளிப் பருவத்தில் மலர்ந்த நட்பை 40 ஆண்டுகளைக் கடந்தும் புதுப்பிக்கும் வகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு விழா, முன்னாள் மாணவர்களிடையே நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.இவ்விழாவில் முன்னாள் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *