அரியலூர் மாவட்டம் வாலாஜா நகரம் ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை ஒட்டி கிராம சபை கூட்டம் அங்குள்ள சமுதாயக் கூடத்தில் நடந்தது ஊராட்சி செயலாளர் மு தமிழ்குமரன் தீர்மானங்களை படித்தார் மொத்தம் 14 பொருட்கள் விவரம் விவாதிக்கப்பட்டது ஊராட்சி உதவியாளர் வி சித்ரா பற்றாளராக கலந்து கொண்டார்

இளநிலை சுகாதார செவிலியர் புவனேஸ்வரி குழந்தைகள் பாதுகாப்பு சமூக பணியாளர் ராஜேஸ்வரி அங்கன்வாடி மேற்பார்வையாளர் சாந்தகுமாரி மதியழகன் உட்பட கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

முன்னதாக தேச பிதா மகாத்மா காந்தி படத்திற்கு பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர் இதேபோல் அரியலூர் ஒன்றியம் தாமரைக் குளம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் முத்து தீர்மானங்களை படித்தார்

அரியலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆ மரகதம் ஆகியோர் மேற்பார்வையில் கிராம சபை கூட்டம் நடந்தது பணிதல பொறுப்பாளர் சிலம்பரசி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *