ரூ.900 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் தென்னிந்தியா மற்றும் அமெரிக்காவில் வர்த்தக விரிவாக்கம் – 2027–28-க்குள் ரூ.5,000 கோடி வருவாய் ஈட்ட இலக்கு

கோவை: இந்தியாவின் பாரம்பரியமிக்க நகை நிறுவனங்களில் ஒன்றான விபிஜே (VBJ – வும்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ்), கோவையில் தனது பிரம்மாண்டமான புதிய ஷோரூமைத் திறந்துள்ளது. 21,000 சதுர அடி பரப்பளவில், 100 அடி சாலையில் அமைந்துள்ள இந்த ஷோரூம், தமிழ்நாட்டிலேயே நிறுவனத்தின் மிகப்பெரிய விற்பனை மையமாகும். சென்னைக்கு அப்பால் தனது வர்த்தகச் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் நிறுவனத்தின் முக்கிய முன்னெடுப்பாக இது அமைந்துள்ளது.

126 ஆண்டுகால பாரம்பரியத்தைக் கொண்ட VBJ, நகை வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ‘Peacock Saga’, ‘Florals’, ‘Parro’ உள்ளிட்ட 15 பிரத்யேக நகைத் தொகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. பாரம்பரிய கைவினைத் திறனையும் நவீன வடிவமைப்பையும் இணைக்கும் வகையில் இத்தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மூன்று தளங்களைக் கொண்ட புதிய ஷோரூமில், ஒவ்வொரு தளமும் வெவ்வேறு வகையான நகைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் தங்கம், விலைமதிப்புமிக்க கற்கள் பதித்த நகைகள் மற்றும் ஜடாவ் நகைகள் இடம்பெற்றுள்ளன. முதல் தளத்தில் வைரம், சாலிடேர் மற்றும் பிளாட்டினம் நகைத் தொகுப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஜெமாலஜிக்கல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அமெரிக்கா (GIA) சான்றளித்த வைர நகைகளையும் வாடிக்கையாளர்கள் இங்கு வாங்கலாம்.

வெள்ளிப் பொருட்கள் மற்றும் வெள்ளி நகைகளுக்கான பிரத்யேக தளமும், நிறுவனத்தின் உயர் மதிப்பு நகைப் பிரிவான ‘Atelier by VBJ’-யும் விரைவில் திறக்கப்பட உள்ளன. தனிப்பட்ட பார்வையிடும் வசதி, பிரத்யேக வாடிக்கையாளர் சேவை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்தர நகைத் தொகுப்புகளுடன் சிறப்பான வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்கும் வகையில் இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

ஷோரூம் திறப்பு குறித்து VBJ-யின் நிர்வாகப் பங்குதாரர் அமரேந்திரன் வும்மிடி கூறுகையில், “கோவையின் வலுவான வர்த்தகச் சூழலும், நகைகள் மீதான மக்களின் ஆர்வமும் இந்நகரை எங்களுக்கு முக்கியமான சந்தையாக மாற்றியுள்ளன. தமிழ்நாட்டிலேயே எங்களது மிகப்பெரிய ஷோரூமை இங்கு அமைத்திருப்பது, கோவையின் வளர்ச்சி மீதான எங்களது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. 126 ஆண்டுகளாக எங்களது அடையாளமாகத் திகழும் தரம், கைவினைத் திறன் மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையைத் தொடர்ந்து பேணுவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம்,” என்றார்.

தென்னிந்தியா மற்றும் அமெரிக்காவில் விரிவாக்கம்

நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு மற்றும் தெலங்கானாவின் முக்கிய நகரங்களில் தனது வர்த்தக இருப்பை விரிவுபடுத்த VBJ திட்டமிட்டுள்ளது. இதன்படி திருச்சிராப்பள்ளி மற்றும் ஹைதராபாத் நகரங்களில் புதிய விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சென்னையில் தி.நகர் மற்றும் குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விற்பனைச் செயல்பாடுகளை வலுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலும் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தி வரும் VBJ, டெக்சாஸில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் ஷோரூமைத் தொடர்ந்து, கலிஃபோர்னியாவின் மில்பிடாஸ் நகரிலும் புதிய ஷோரூமைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வாடிக்கையாளர்களை அதிக அளவில் சென்றடைய நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்தியாவிலும் அமெரிக்காவிலும் மேற்கொள்ளப்பட உள்ள விரிவாக்கத் திட்டங்களின் மூலம், 2027–28 நிதியாண்டிற்குள் ரூ.5,000 கோடிக்கும் அதிகமான வருவாயை எட்ட VBJ இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக ரூ.900 கோடிக்கும் அதிகமான முதலீட்டை மேற்கொள்ள நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

VBJ-யின் மற்றொரு நிர்வாகப் பங்குதாரரான ஜிதேந்திரா வும்மிடி கூறுகையில், “இன்றைய வாடிக்கையாளர்களின் மாறிவரும் எதிர்பார்ப்புகளைக் கருத்தில் கொண்டு கோவை ஷோரூம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு வகையான நகைகளை ஒரே இடத்தில் விரிவான தேர்வுகளுடன் வழங்குவதுடன், எங்களது பிரத்யேக வடிவமைப்புக் குழுவின் மூலம் தொடர்ந்து புதிய மற்றும் தனித்துவமான வடிவமைப்புகளையும் அறிமுகப்படுத்தி வருகிறோம். GIA சான்றளிக்கப்பட்ட வைர நகைகள் மற்றும் விரிவான திருமண நகைத் தொகுப்புகள் இந்த ஷோரூமின் முக்கிய சிறப்பம்சங்களாக இருக்கும்,” என்றார்.

திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்புத் தள்ளுபடிகள்

புதிய ஷோரூம் திறப்பு மற்றும் பண்டிகைக் காலக் கொண்டாட்டத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்குச் சிறப்புச் சலுகைகளையும் VBJ அறிவித்துள்ளது. தங்கம், வைரம், பிளாட்டினம், விலைமதிப்புமிக்க கற்கள் பதித்த நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களுக்கான சேதாரக் கட்டணம் மற்றும் மதிப்புக் கூட்டுதல் கட்டணத்தில் 20 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. வெள்ளி நகைகளுக்கு 10 சதவீத தள்ளுபடியும், பழைய தங்க நகைகளை மாற்றும்போது ஒரு கிராமுக்கு கூடுதலாக ரூ.125 வழங்கும் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாரம்பரியத்துடன் இணைந்த 126 ஆண்டுகாலப் பயணம்

ஐந்தாவது தலைமுறையாக குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் VBJ, இந்தியாவின் ஜனநாயகப் பயணத்தின் முக்கிய அடையாளமான வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை உருவாக்கிய பெருமையைப் பெற்றுள்ளது. 72 ஆண்டுகளுக்குப் பிறகு VBJ குழுவின் விரிவான ஆய்வுகள் மூலம் மீண்டும் கண்டறியப்பட்ட அந்தச் செங்கோல், புதிய நாடாளுமன்றக் கட்டடமான ‘சன்சத் பவனில்’ மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகில் நிறுவப்பட்டுள்ளது. இது இந்தியாவின் கலாசார மற்றும் தேசிய பாரம்பரியத்துடன் VBJ கொண்டுள்ள ஆழமான தொடர்பை எடுத்துக்காட்டுகிறது.

மேலும், பாரம்பரியத்தையும் புதுமையையும் இணைக்கும் முயற்சியாக, அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ராமசரிதமானஸுக்கும் VBJ தனித்துவமான படைப்பை உருவாக்கியுள்ளது.

1900-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட VBJ-யின் நீண்ட வர்த்தகப் பயணத்தில் கோவை ஷோரூம் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. பாரம்பரிய வடிவமைப்பு, உயர்தர கைவினைத் திறன் மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம், புதிய சந்தைகளில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்துவதன் மூலம் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *