பேராவூரணி, நவ 2-
தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலம் அருகில் உள்ள வாட்டாத்திக்கோட்டை ஊராட்சி, கல்லாம்பிறை கிராமத்தைச் சேர்ந்தவர் சாத்தையன் (33). கூலித் தொழிலாளியான இவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இவருக்கு நித்தியா என்ற மனைவியும், 3 வயது மற்றும் 8 மாதமான 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்து வரும் இவரது குடும்பம் மிகவும் வறுமை நிலையில் உள்ளது.
இது குறித்து தகவலறிந்த பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார், பாதிக்கப்பட்ட நித்தியாவை நேரில் சந்தித்து, தனது சொந்தப் பணத்திலிருந்து ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது வாட்டாத்திக்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், தி.மு.க. வடக்கு ஒன்றியச் செயலாளருமான பரமேஸ்வரி பன்னீர்செல்வம் உடனிருந்தார்.
பேராவூரணி நீலகண்டன் .