கோவை சிங்காநல்லூரை சேர்ந்த சுரேஷ் குமார் உஷா லட்சுமி ஆகிய தம்பதியனரின் மகள் சஞ்சனா. ஹிந்துஸ்தான் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி சஞ்சனா, சிறு வயது முதல் யோகா செய்வதில் ஆர்வடன் இருந்துள்ளார்.


இந்நிலையில்,ஒற்றை காலில் நின்றபடி யோகாசனங்களைச் செய்து பயிற்சி செய்த மாணவி சஞ்சனா 50 யோகாசனங்களை தொடர்ந்து செய்து,உலக சாதனை படைத்துள்ளார்.
பிரேவ் ஃபிட் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் மாணவி சஞ்சனா, உடல் சமநிலை, மன ஒருமைப்பாடு மற்றும் உடல் கட்டுப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில்,விருட்சாசனம், நடராஜாசனம், வீரபத்ராசனம் போன்ற 50 வகையான ஆசனங்களை ஒரு காலில் நின்றபடி தொடர்ந்து செய்து, சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.இந்தச் சாதனை நிகழ்ச்சியை பிரேவ் ஃபிட் அகாடமியின் நிறுவனர் மற்றும் சோழன் உலக சாதனைப் புத்தகத்தின் கோவை மாவட்டத் தலைவருமான பாலமுரளிகிருஷ்ணன் கண்காணித்து, சாதனையை நிகழ்த்திய மாணவி சஞ்சனாவுக்கு, சோழன் உலக சாதனைப் புத்தகத்தின் சான்றிதழ் மற்றும் பதக்கத்தை வழங்கி கவுரவித்தார்.


சாதனை நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஆஃப் கோவை மிட் டவுன் செயலாளர் கண்ணன் பாபு மற்றும் சோழன் உலக சாதனைப் புத்தகத்தின் கோவை மாவட்டச் செயலாளர் திலகவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவியின் சாதனையைப் பாராட்டினர்.சிறு வயதிலேயே யோகாசனத்தில் ஆர்வம் காட்டி, உடல் மற்றும் மன உறுதியை வெளிப்படுத்தி உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த மாணவி சஞ்சனாவுக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *