கடத்தூர்: மாநில அளவிலான சைக்கிள் போலோ போட்டியில், கடத்தூர் கிரீன் பார்க் இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இந்தப் போட்டியில் சப்-ஜூனியர் பெண்கள் பிரிவில் பங்கேற்ற அக்ஷயா ஸ்ரீ, ஹரிணி, தமிழ் பாரதி, சாதனா ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.

ஜூனியர் பெண்கள் பிரிவில் ஜீவனெத்திகா, கீர்த்தனா ஆகியோர் மூன்றாம் இடமும், ஜூனியர் ஆண்கள் பிரிவில் கௌதம், அஸ்வத் ஆகியோர் மூன்றாம் இடமும் பெற்று பள்ளிக்குப் பெருமை தேடித்தந்தனர்.

மேலும், சீனியர் ஆண்கள் பிரிவில் நிதிஷ், ஸ்ரீநித்ரன் ஆகியோர் முதலிடம் பிடித்து மாநில அளவில் சிறப்பிடம் பெற்றனர்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், அவர்களுக்கு சிறப்பான பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் விஜயனையும் பள்ளியின் நிறுவனர் எவரெஸ்ட் இரா. முனிரத்தினம் மற்றும் சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

மாணவர்களின் விடாமுயற்சி, விளையாட்டுத் திறன் மற்றும் ஆசிரியரின் அர்ப்பணிப்பால் கிடைத்துள்ள இந்த வெற்றி பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *