மேட்டூர்:

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள தொட்டில்பட்டி சேலம் கேம்ப் பகுதியில் ஆர். சுந்தர்ராஜன் என்பவரது வீட்டில் மலைப்பாம்பு ஒன்று புகுந்திருப்பதாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தீயணைப்புத் துறை அதிகாரி திரு. வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு வீட்டில் இருந்த மலைப்பாம்பை லாவகமாகப் பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த மலைப்பாம்பு பாதுகாப்பாக வனப்பகுதியில் விடப்பட்டது.

தீயணைப்புத் துறையினரின் துரித நடவடிக்கையால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *