தேனி, : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை தொடக்க விழா நடைபெற்றது.
விழாவில், மாவட்ட கலெக்டர் வி. சிவகிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு ஆவின் பால் பொருட்கள் விற்பனையை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பெரியகுளம் சார் ஆட்சியர் தவலேந்த் மற்றும் அரசு அலுவலர்கள், ஆவின் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.