திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர் தெற்கு ஒன்றியத்தில் உள்ள அனேரி, ராச்சமங்களம் மற்றும் சௌடேகுப்பம் ஆகிய ஊராட்சிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து நேரடி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், திருப்பத்தூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான திருப்பதி பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது சாலை வசதிகள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளின் பராமரிப்பு, குடிநீர் வசதி மற்றும் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

மேலும், பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *