தென் தமிழகத்தில் மிக முக்கிய மருத்துவமனையாக மதுரை அரசு மருத்துவமனை உள்ளது. அரசு மருத்துவமனையின் பழைய வளாகம், சூப்பர் ஸ்பெஷாலிட்டி வளாகம், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு ஆகிய 3 இடங்களிலும் தனியார் நிறுவனத்தின் சார்பில் 750-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படை யில் பணியாற்றுகின்றனர். அவர்கள், அரசு மருத்துவமனையின் தூய்மை மற்றும் காவல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்கள், பணி நிரந்தரம், வார விடுமுறை, தீபாவளி முன்பணம் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மருத்துவமனை மெயின் ரோடு அருகே போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர், மாவட்ட கலெக்டர் நிஷாந்த் கிருஷ் ணாவை சந்தித்து தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

இதுகுறித்து ஊழியர்கள் | கூறுகையில், எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மாதம் 2 தினங்கள் போராட் டம் நடத்தினோம்.அப்போது எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக கூறி விட்டு, தற்போது அதனை செய்யவில்லை. இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
இதனை தொடர்ந்து கலெக்டர், டீன், மருத்துவஇருப்பிட அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாககூறி இருக்கிறார்கள்.
குறிப்பாக, தீபாவளிக்கு முன்பணமாக ரூ.3 ஆயிரமும், 5-ந்தேதிக்குள் சம்பளமும், மாதத்தில் ஒரு நாள் விடு முறை தருவதாகவும் உறுதி அளித்துள்ளனர். இதுபோல், சில கோரிக்கைகளை செய்து தருவதாக கூறி இருக்கிறார்கள். இதனால், போராட்டத்தை கைவிட்டிருக்கிறோம் என்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *