தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை ஒப்பந்ததாரர்களின் மதுரை மண்டல சங்க கூட்டம் தூத்துக்குடியில் உள்ள டி எஸ் எப் கிராண்ட் பிளாசாவில் வைத்து நடைபெற்றது. மண்டல தலைவர் கருப்பசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்..
கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் சுரேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் கூறுகையில்., காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்ற அடிப்படையில் தான் ஒப்பந்ததாரர்களின் வாழ்வாதாரம் உள்ளது. கடந்த ஆட்சியை விட தற்போதைய ஆட்சியில் விடிவு காலம் பிறக்கும் என்று இருந்தோம் ஆனால் அது நடக்கவில்லை.
16.10.26ல் முதன்மை தலைமை பொறியாளர் செந்தில் அவர்களால் ஒப்பந்ததாரர்களை வஞ்சிக்கும் நோக்கில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஒப்பந்ததாரர் வகுப்புகளை நான்காக குறைத்து அதற்கு தேவைப்படும் சால்வன்சி முதல் வகுப்பிற்கு ஒன்றறை கோடி ரூபாய் பேங்க் கேரண்டியாக செலுத்த குறிப்பிட்டுள்ளார்கள். இந்த நிகழ்வு ஒப்பந்ததாரர்களுக்கு மிகவும்
பேரடியாக வாழ்வாதாரம் அழியும் நோக்கில் சிறு ஒப்பந்ததாரர்களை முழுமையாக அளிக்கும் நோக்கில் கார்ப்பரேட் நிறுவனங்கள் பயன்பெரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது…
அமைச்சர் இதனை செயல்படுத்த நினைத்தால் அதிகாரிகள் எடுத்துக் கூற வேண்டும்.. ஆனால் அதிகாரிகள் எடுத்து கூறவில்லை. அடிப்படை உரிமையை பறிக்கும் வகையில் அரசாணை இருக்கிறது. ஆகவே இதனை மாற்றம் செய்ய வேண்டும்..
4,000 காண்ட்ராக்ட், 40,000 குடும்பம், 4 லட்சம் பணியாளர்கள் இருக்கிறார்கள்.. ஆகவே அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் வாழ்வாதாரம் அழிந்து விடும். கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் போராட்டக் களத்திற்கு தள்ளப்படுவோம் வேறு வழி இல்லை.
தமிழகம் முழுவதும் ஒப்பந்ததாரர்களுக்கு நிதி தாமதமாக தான் வந்து கொண்டிருக்கிறது. நிதியை விரைவாக அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். குறிப்பிட்ட சில மாவட்டங்களில் இன்னும் நிதி வராமலே இருக்கிறது.
தவெக ஆட்சியில், இதுவரை எந்த ஒரு புதிய திட்டங்களுக்கும் ஒப்பந்தம் வழங்கப்படவில்லை. ஆட்சிக்கு வந்த 15 நாட்களில் 1.800 கோடி ரூபாய்க்கு எல்என்டி போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்க டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் பேர் ஒப்பந்தத்தார்கள் இருக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு ஒரு ஒப்பந்தம் கூட கொடுக்கப்படவில்லை..
லஞ்சம் இல்லாத ஆட்சி நடத்துவதாக கூறும் தவெக அரசு லஞ்சம் பெரும் நோக்கில் இது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவதாக கூறினார்..
பேட்டி: சுரேஷ்குமார், மாநிலச் செயலாளர், தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை ஒப்பந்ததாரர்கள் சங்கம்.